தூத்துக்குடியில் டீ வியாபாரி தூக்கிட்டு தற்கொலை.
தூத்துக்குடி மடத்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கரன் என்பவரின் மகன் முனியசாமி (58), இவர் டீ வியாபாரம் செய்து வந்துள்ளார்,இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒருவிபத்தில் காலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக அவரால் தொழில் செய்ய முடியாமல் இருந்த மன வருத்தத்தில் இருந்த முனியசாமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.