தூத்துக்குடியில் அரிசி மண்டி கடைக்காரர் விஷம் அருந்தி தற்கொலை!


தூத்துக்குடி முத்தையாபுரம் பேரின்ப நகரை சேர்ந்தவர் கடற்கரை முத்து என்பவரின் மகன் கணேசபெருமாள் (50), இவர்  அப்பகுதியில் அரிசி மண்டி கடை நடத்தி வந்துள்ளார், இந்தநிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கணேசபெருமாள் பூச்சி மருந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.