எட்டையாபுரம் அருகே வேன் - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 பேர் படுகாயம்!
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியை ராஜசேகர் வயது 58 இவரது தலைமையில் சுமார் 19 பேர் ஒரு வேனில் திருச்செந்தூருக்கு வந்து கொண்டிருந்தனர். மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வேண் சென்று கொண்டிருந்தபோது, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது, இந்நிலையில் அந்த பணிக்காக மாற்று பாதையில் வாகனத்தை எதிர் திசையில் மாற்றி விட்டனர், அப்போது தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி செல்லும் மினி லாரி வந்து கொண்டிருந்தது மினி லாரியை கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியில் சேர்ந்த சுந்தர்ராஜ் வயது 48 என்பவர் ஓட்டி வந்தார் மினி லாரியும் வேணும் வந்து கொண்டிருந்தபோது எட்டயபுரம் அருகே உள்ள கீழஈரால் விலக்கு அருகே எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது, இந்த விபத்தில் வேனில் இருந்த ராஜசேகர் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தகளை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரியை ஓட்டி வந்த சுந்தர்ராஜுக்கு கால் முறிவு ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.