தூத்துக்குடியில் இரண்டாவது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் தூக்கிட்டு தற்கொலை.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காலனி தெருவை சேர்ந்தவர் சண்முகம் மகன் கணேசன் (37), இவருக்கு திருமணம் ஆகி இரண்டு  குழந்தைகள் உள்ள நிலையில், இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார், இந்நிலையில் தூத்துக்குடி உள்ள ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, அவரை திருமணம் செய்து தூத்துக்குடியில் தனியாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரண்டாவது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த கணேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தாளமுத்து நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.