தூத்துக்குடி அருகே வாகன விபத்தில் ஊர்க்காவல் படை காவலர்  உயிரிழப்பு.

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (47)இவர் ஊர்க்காவல் படை காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீவைகுண்டத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சதீஷ்குமார் மீது பின்னால் வந்த கிரேன் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்ட சதீஷ்குமார் சிகிச்சைபலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.