எட்டையபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத குடிநீர் குழாய் உடைந்து 50'அடி உயரத்திற்கு பீய்ச்சி அடிக்கும் தண்ணீர்: வீணாகும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் : சரி செய்யாமல் அதிகாரிகள் மெத்தனம்..!
தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே அமைந்துள்ள மேலக்கரந்தையில் சாலையோரத்தில் சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் ரட்சதக் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு சுமார் 50' அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கொண்டிருக்கிறது. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் இது குறித்து சம்பந்தப்பட்ட குடிநீர் வாரியத்திடம் தெரிவித்தும் தற்போது வரை இது சரிசெய்யப்படாமல் "கண்டும் காணாமல் பார்ப்போம்..." என்று அலட்சியமாக பதில் கூறி வருகின்றனர் என்று பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
மேலும் அப்பகுதியில் மின் இணைப்பு கம்பிகள் செல்வதால் பீய்ச்சி அடிக்கும் தண்ணீர் மின் கம்பிகளில் பட்டு மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் ராட்சத குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கொட்டுக்கொண்டுள்ளனர்.
இதுபற்றி தகவல் தெரிவித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அதனை சரிசெய்ய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாவதோடு மட்டுமின்றி மின் விபத்து ஏற்படும் அசாதாரண சூழ்நிலையும் நிலவி வருகிறது என பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறுகின்றனர்..