தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாப்பாத்தி அம்மன், ஸ்ரீ காந்தாரி அம்மன், ஸ்ரீ முனியசாமி திருக்கோவிலின் ஆனிக்கொடை விழாவை முன்னிட்டு கிராம பொதுமக்கள் சார்பாக மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
சின்னமாடு மற்றும் பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாட்டு வண்டி போட்டியில் 37 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சிறீப்பாய்ந்து சென்றன.இப்போட்டியை விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் முனிசக்தி இராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்போட்டியில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாட்டுவண்டிகள் முதலிடங்களை பிடித்து வெற்றி பெற்றன. பின்னர் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுத்தொகை, குத்துவிளக்கு மற்றும் பரிசு கோப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஆனிக்கொடை விழாவை முன்னிட்டு கலைஞானபுரம் கிராமத்தில் நடைபெற்ற இந்த மாபெரும் மாட்டு வண்டி போட்டியை ஏராளமான பந்தய ரசிகர்கள் சாலையின் இருபுறமும் கூடியிருந்து கண்டு களித்தனர்.
தூத்துக்குடி
மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் : குத்துவிளக்கு, பரிசுக்கோப்பையை தட்டிச் சென்ற வீரர்கள்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அரசு பேருந்தின் மீது கல் வீச்சு - கண்ணாடி உடைப்பு பரபரப்பு !
அடுத்த
மீனவர்களுக்கு முறையாக மண்ணெண்ணெய் வழங்கப்படாததை கண்டித்து தரையில் படுத்து உருண்டு தங்கள் எதிர்ப்பு பதிவு செய்தனர்.
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026