தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கோவில்பட்டியைடுத்த கயத்தாறு சுங்கச்சாவடி அருகே தனிப்படையினர் உதவி ஆய்வாளர்கள் ரவிக்குமார், ராஜ பிரபு,, பிரைடரிக் ராஜன் ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த கண்டெய்னர் லாரியை திறந்து சோதனையிட்டபோது அதில் மேற்பகுதியில் ஒரு ரகசிய அறை இருப்பது தெரிய வந்தது.பின்னர் போலீசார் அந்த அறையை திறந்து சோதனையிட்ட போது சுமார் இரண்டு கிலோ எடை கொண்ட 300 பேக்குகளில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
அதையடுத்து 600 கிலோ கஞ்சாவுடன் கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதை கோவில்பட்டி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.தொடர்ந்து கண்டெய்னர் லாரி ஓட்டுநர் பாண்டிச்சேரி ஏனம் பகுதியைச் சேர்ந்த சத்தி பாபு(39) மற்றும் கண்டெய்னர் லாரியில் இருந்த தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி சேர்ந்த சேகர் மகன் விஜயகுமார்(36), தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்த கோயில் பிள்ளை விளையைச் சேர்ந்த பாலச்சந்தர் மகன் மத போதகரான ஜான் அற்புத பாரத்(33) ஆகிய 3பேரையும் போலீஸார் கைது செய்தனர். மத போதகரே கஞ்சா கடத்தல் ஈடுபட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி
1 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்தல் - மத போதகர் உட்பட 3 பேரை அதிரடியாக கைது செய்த போலீசார்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளுக்கு பாஜக சார்பில் வீரவணக்கம் : நினைவுச் சின்னத்திற்கு மாலையணிவித்து மரியாதை!
அடுத்த
உசிலங்குளம் மாட்டு வண்டி பந்தயம்!
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026