தூத்துக்குடி குரூஸ்புரம் பகுதியைச் சேர்ந்த  பால்ராஜ் (55), இவர் வழக்கறிஞர் குமாஸ்தாவாக  வேலை பார்த்து வந்துள்ளார், கூடுதலாக ரியல் எஸ்டேட் நில புரோக்கர்  வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பால்ராஜ் 10-05-2024 வெள்ளிக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற பால்ராஜ் வெகுநேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இந்நிலையில் 11-05-2024 சனிக்கிழமை அதிகாலை தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையம் அருகே உள்ள பால்ராஜ் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை அடுத்து உடலை கைப்பற்றிய மத்தியபாகம் காவல் நிலைய போலீசார், பால்ராஜ் உடலை மீட்டு பிரேத ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பால்ராஜ்க்கு குடிப்பழக்கம் இருந்து உள்ளதால் நண்பர்களுடன் மது குடிக்கு சென்ற போது ஏற்பட்ட தகராறு காரணமாக குத்தி கொலை செய்யப்பட்டாரா, அல்லது  நிலவிற்பனை தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.