எட்டையபுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77- வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!


தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் விழாவானது கட்சியினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் பட்டத்து விநாயகர் கோவில் முன்பு எட்டையாபுரம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர செயலாளர் ச.ராஜகுமார் தலைமையில் அதிமுகவினர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர். இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு நகர செயலாளர் ச.ராஜகுமார் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அங்கிருந்த கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.இந்நிகழ்ச்சியில் ,மகளிர் அணி செல்வி, சாந்தி,வார்டு செயலாளர் அய்யம்மாள் கருப்புசாமி  , மோகன், உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.