தூத்துக்குடி அருகே சங்குகுளிக்கு சென்ற மீனவர் உயிரிழப்பு.


தூத்துக்குடி குரூஸ்புரத்தை சேர்ந்த டேனியல் என்பவரின் மகன் சாம்சன் (20), இவர் சக மீனவர்களுடன் கடற்கரையில் இருந்து சுமார் 10 கடல்மைல் தொலைவில் சங்குகுளித்துக்கொண்டிருந்தபோது சாம்சன் திடீரென காணாமல் போனார், இதனைஅடுத்து சக மீனவர்கள் தேடிப்பார்த்த நிலையில், சாம்சன் உடல் வீரபாண்டியபுரம் கடற்கரைப் பகுதியில் சடலமாக கரை ஒதுங்கியது, இதுகுறித்து தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.