தூத்துக்குடியில் கொடுத்த பணம் திருப்பி வராததால் பைனான்சியர் தூக்கிட்டு தற்கொலை.


தூத்துக்குடி லயன் டவுன் பகுதியை சேர்ந்தவர் ஜேசு மகன் லியோனா  சர்ப்பராஜ் (56), இவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்துள்ளார், இந்நிலையில் இவர் வெளியில் கொடுத்த 5 லட்சம் ரூபாய் பணம் திருப்பி வராததால் மன வேதனையில் இருந்த லியோனா சர்ப்பராஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.