ஓட்டப்பிடாரம் அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது.


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கீழமுடிமண் காலனி தெருவை சேர்ந்தவர் சார்லஸ் (43),கூலித் தொழிலாளி. இவரது மனைவி --------- ,இவர் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அவருடைய 15 வயது மகளுக்கு சார்லஸ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.


பாதிக்கப்பட்ட சிறுமி தாயிடம் கூறிய நிலையில், அவர் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சார்லஸை கைது செய்தனர். பின்னர் அவர் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.