விவசாய நிலங்களை அழித்து சிப்காட் அமைக்கும் பணிகளை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி எட்டயபுரம் அருகே விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம்!





தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள வெம்பூர், கீழக்கரந்தை, இராமசாமிபட்டி,பட்டித்தேவன்பட்டி, உள்ளிட்ட கிராமப்பகுதியில் சுமார் 2700 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி விவசாயிகள், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலுமு; சிப்காட் திட்டத்தினை கைவிட வலியுறுத்தி சாலைமறியல், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு வடிவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழக அரசு சார்பிலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் விவசாய நிலங்களை அழித்து சிப்காட் அமைக்கும் பணிகளை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி  மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் வெம்பூரில் விவசாயிகள் மேலாடை இல்லமால் அரை நிர்வாணப்போராட்டத்தில் ஈடுபட்டனர். சிப்காட் அமைக்கும் பணிகளை கைவிட வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.