திருச்செந்தூரில் பழம் கொடுக்க சென்ற பாகனை மிதித்தே கொன்ற யானை!


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தெய்வானை என்ற பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது, இந்த யானையை திருச்செந்தூரை சேர்ந்த சதாசிவம் என்பவரின் மகன் உதயகுமார் (45) என்பவர் யானைப்பாகனாக இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் யானைக்கு பழம் கொடுக்க சென்ற  உதயகுமார் மற்றும் உடன் பாகனாக இருந்த நாகர்கோவிலை சேர்ந்த சிவபாலன் (58)  ஆகியோர் இருவரையும் யானை மிதித்து போன்றதில் இருவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


இதனால் 1 மணி நேரம் திருச்செந்தூர் கோவிலில் நடை சாத்தப்பட்டது, யானை மிதித்து பாகன் உயிரிழந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....