எட்டையாபுரத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு 18' அடி அலகு குத்தி, பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்...!
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் மற்றும் தெப்பக்குளம் விநாயகர், நடுவிற்பட்டி புது அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள புது அம்மன், மும்மூர்த்தி விநாயகர் திருக்கோவிலில் பங்குனி மாத கொடை விழா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 18'அடி அலகு குத்தி வீதி உலாவாக நகர்வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தனர். அதேபோன்று 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் உட்பட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது. மேலும், கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற பூக்குழித் திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். இதில் எட்டையபுரம் மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அருட்பிரசாதம் பெற்றுச் சென்றனர்..