தூத்துக்குடி
மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் நான்குக்கு மேற்பட்ட கொலைகள்,பைக் திருட்டு, அடிதடி வழக்குகள்,வழிப்பறி
உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில்
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த நாகூர் ஹனிபா என்பவரின் மகன்
அப்துல் ரஹீம் (21) என்பவர் 10-05-2024
வெள்ளிக்கிழமை இரவு தனது
இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, அவரை மறுமண நபர்கள் இருவர் வழிமறித்து அவரிடம்
இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் வெள்ளிக் கொடியை பறித்து சென்றுள்ளனர். இதனை
அடுத்து அப்துல் ரஹீம் கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பகம் காவல் நிலைய
போலீசார் வழக்கு பதிவு செய்து, தூத்துக்குடி நகர
DSP கேல்கர் சுப்பிரமணிய
பாலச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து திருடர்களை தேடி வந்த நிலையில், தூத்துக்குடி தாமோதரன் நகர் பகுதியை சேர்ந்த சங்கர்
மகன் யானை செல்வம் (27), மற்றும் தமிழ்மணி
மகன் ஆனந்த்பாபு(24) ஆகிய இருவரையும்
கைது செய்து அவர்களிடம் இருந்த 20 ஆயிரம்
மதிப்புடைய செல்போன் மற்றும் ரூபாய் 4,310
பணத்தை பறிமுதல்
செய்தனர். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்
இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் தொடரும் குற்ற சம்பவங்கள் -செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"படர்ந்தபுளி லியா கைப்பந்து கழகம்" சார்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி : பல்வேறு மாவட்டங்களில் இருந்து 70-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு!
அடுத்த
எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் 500 பேருக்கு சுடச்சுட... பிரியாணி வழங்கி கொண்டாடிய அதிமுக நிர்வாகி ராஜகுமார்!
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026