ஓட்டப்பிடாரம் பகுதியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு...


தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் 8-ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு  மாலை அணிவித்து மலர் தூவி  மரியாதை செலுத்தினர். அந்த வகையில் தூத்துக்குட மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒட்டுடன்பட்டி  கிராமம் புளியம்பட்டியில் வைக்கப்பட்டிருந்த  முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அவர்களின் 8-ஆண்டு நினைவு அஞ்சலி  தினத்தை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இந்த நிகழ்வில்  அதிமுக மூத்த  உறுப்பினருமான பாளையங்கோட்டை லயன்ஸ் கிளப் பட்டய தலைவர் டாக்டர் வி.சந்திரசேகன் முன்னிலையில் ஓட்டுடன்பட்டி அதிமுக கிளை கழகச் செயலாளருமான பாளையங்கோட்டை லயன்ஸ் கிளப் தலைவர் ஆனந்தகுமார், ஓட்டுடன் பட்டி அதிமுக கிளை அவைத் தலைவர் துரைராஜ், மாவட்ட பிரதிநிதி மணி, புளியம்பட்டி கிளைச் செயலாளர் மூர்த்தி, புளியம்பட்டி அவைத்தலைவர் அண்ணாதுரை, கொடியன்குளம் கிளைச் செயலாளர் உதயகுமார், தொழில்நுட்ப பிரிவு கணேசன், பிரபாகரன், ஆகியோர் கலந்து கொண்டனர்....