எட்டயபுரம் அருகே அரசு ஆரம்பப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா:கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடமணிந்த தலைமையாசியர் !



தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.இயேசு பிறப்பை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் டிசம்பர்  24 ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.இதனையொட்டி பள்ளி தலைமையாசிரியர் மு.க.இப்ராஹிம் கிறிஸ்துமஸ் தாத்தா போல வேடமணிந்து மாணவியர்களுடன் ஆடிப்பாடி இனிப்புகளை வழங்கினார்.


மகிழ்ச்சி,அன்பு,கருணை,மன்னிப்பு ஆகியவை மனித சமூகத்தை உயர்த்தும்  நற்பண்புகள் என்பதை வலியுறுத்தவே பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது என  தலைமையாசிரியர் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.