தூத்துக்குடியில் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமை பெண் விரிவாக்க திட்டத்தை மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்வில் தலைமைச் செயலாளர் முருகானந்தம்,.தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி,அமைச்சர்கள் கீதாஜீவன்,அனிதாராதாகிருஷ்ணன்.அன்பில் மகேஷ்,தூத்துக்குடிமாவட்ட ஆட்சியர் கா.இளம்பகவத் சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்க்கண்டயேன் மற்றும் அரசு அலுவலர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.