எட்டையாபுரத்தில் மதுபாட்டில்களுக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் !
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் பட்டத்து விநாயகர் கோவில் முன்பு ஒன்றிய தலைவர் சரவணகுமார் தலைமையில் பாஜகவினர் டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களை கைது செய்ததை கண்டித்து டாஸ்மார்க் ஊழலை கண்டித்தும்,திமுக அரசு கண்டித்தும், பாஜகவினர் மது பாட்டில்களுக்கு மாலை அணிவித்து, அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக பதவி விலகு பதவி விலகு என கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 20- பேர் எட்டையாபுரம் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.