பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான எட்டயபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியரை கைது செய்ய வலியுறுத்தி எட்டயபுரத்தில் கண்ணில் கருப்பு துணி கட்டி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியர் மதன்குமார் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி 3 மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்து இருந்தனர். இதில் கார்மெண்ட் டெக்னாலஜி பாடப்பிரிவில்
முதலாம் ஆண்டு பயிலும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த 17 வயது மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பேராசிரியர் மதன்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியரை கைது செய்ய வேண்டும். , உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த கல்லூரி முதல்வரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பொதுச் செயலாளர் எட்டையாபுரம் மகாகவி பாரதியார் பேருந்து நிலையத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சியினர் கண்ணில் கருப்பு துணி கட்டி, கையில் தங்களது கோரிக்கைகள் ஏந்திய பதாகைகளை ஏந்தியவாறு பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள மகாகவி பாரதியார் திருவுருவைச் சிலையில் மனு கொடுக்க ஊர்வலமாக சென்றனர். பாரதியார் மணிமண்டபம் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.