தமிழ்நாடு அரசு சார்பில் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா!


சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 315-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

iமாவட்ட வருவாய் அலுவலர்.ஆ.இரவிச்சந்திரன்,வருவாய் கோட்டாட்சியர் கோவில்பட்டி க.மகாலட்சுமி, கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி ஆகியோர் உடன் உள்ளனர்.