துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்தவர் மனோகரன் மகன் சக்திவேல் . ஆட்டோ டிரைவரான இவர், சில ஆண்டுக்குமுன் லாரி டிரைவராக பணியாற்றிபோது, விபத்தில் ஒரு கையை இழந்தார். இவருடைய மனைவி பிரிந்து வாழும் நிலையில் ஆட்டோ ஓட்டி சக்திவேல் தனது 2 குழந்தைகளை வளர்த்து வருகிறார். சக்திவேல் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் மற்றும் இளையரசனேந்தல் சாலையில் மேம்பாலம் அருகே பயணிகளை ஏற்றி, இறங்கி வருகிறார். சக்திவேல் இளையரசனேந்தல் சாலையில் மேம்பாலம் அருகே ஆட்டோ ஓட்டுவதற்கு கூடுதல் பஸ் நிலையத்தில் உள்ள ஆட்டோ சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் சக்திவேல் பயணிகளை ஏற்றி , இறக்க விடாமல் தடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது இந்த நிலையில் இன்று சக்திவேல் அண்ணா பஸ் நிலையத்தில் எப்போது நிற்கும் இடமான தேவர் சிலை அருகில் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது கூடுதல் பஸ் நிலையத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் சுடலைமணி, ராஜேஷ் ஆகியோர் வந்து சக்திவேலிடம் பிரச்னை செய்து தாக்கியதாக கூறப்படுகிறது இதில் காயமடைந்த சக்திவேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு விரட்டி வந்த ஆட்டோ டிரைவர் சுடலைமணி மீண்டும் சக்திவேலை தாக்கியதாக கூறப்படுகிறது இதையறிந்த கோவில்பட்டி கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சுடலைமணியை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இந்த விவரம் அறிந்த சக்திவேலின் உறவினர்கள் அவரை தாக்கிய ஆட்டோ டிரைவர்களை கைது செய்யக்கோரி அரசு மருத்துவமனை முன் மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து, மறியலை அவர்கள் கைவிட்டனர். இந்த ஆட்டோ டிரைவர்கள் பிரச்னைகள் அனைத்தும் மேற்கு போலீஸ் நிலையப் பகுதியில் நடந்ததால் சுடலைமணியை மேற்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுடலைமணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி
கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளி ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் - சாலை மறியல் - பரபரப்பு !
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
உள்ளாட்சி தூய்மை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
அடுத்த
சில்லாங்குளம் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக குழ தலைவர் அன்பழகன் நேரில் ஆய்வு!
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026