தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை ஆறு நாட்கள் விசைப்படகுகள் கடலுக்கு தொழிலுக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று விசைப்படகு மீன்பிடி துறைமுகம் முன்பு கூடியதால் பரபரப்பு விசைப்படகு மீனவர்கள் மற்றும் காவல்துறை இடையே வாக்குவாதம் அமைதி பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை.
தூத்துக்குடியில் விசைப்படகு மீன்பிடி தொழிலாளர்கள் கடந்த நான்கு நாட்களாக விசைப்படகுகள் ஆறு நாட்கள் கடலுக்குச் செல்ல உரிமையாளர்கள் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை உடனடியாக தலையிட்டு கடலுக்குச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று மாலை மீனவர்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்தினர் இதைத்தொடர்ந்து அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
இந்நிலையில் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் விசைப்படகு மீனவர்கள் மீண்டும் விசைப்படகு மீன்பிடி துறைமுகம் முன்பு ஒன்று கூடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை ஆறு நாட்கள் கடலுக்கு நிபந்தனையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் தொழிலாளர்களை பிளவு படுத்தி தொழில் முடக்கத்துக்கு காரணமாக உள்ள விசைப்பட உரிமையாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென விசைப்படகு மீன்பிடி துறைமுகம் முன்பு டிஜிட்டல் பேனர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதை தொடர்ந்து விசைப்படகு மீன்பிடி துறைமுகம் முன்பு கூடி இருந்த விசைப்படகு மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் காவல் துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதைத்தொடர்ந்து இன்று மாலை அமைதி பேச்சுவார்த்தை நடைபெற நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து மீனவர்கள் கலைந்து சென்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மீனவர்கள் மற்றும் காவல் துறை இடையே வாக்குவாதம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இலட்சிய ஆசிரியர் விருது - 2023
அடுத்த
சாலையை விரிவுபடுத்த கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் கையெழுத்து இயக்கம் சார்பில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது.
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026