தூத்துக்குடி அருகே கொலை வழக்கில் 10  ஆண்டுகளுக்குப் பிறகு முதியவருக்கு ஆயுள் தண்டனை!


தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே மேலபுதுக்குடி பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் என்பவரின் மகன் மூக்காண்டி (80), இவரைக் கடந்த 19-12-2015 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த பால்பாண்டி மகன் ஜெயபால் (75) என்பவர் வெட்டிக்கொலை செய்துள்ளார். இது சம்பந்தமாக குரும்பூர் காவல் நிலைய போலீசார் ஜெயபாலுவை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.



இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவன், குற்றவாளியான ஜெயபாலுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார்.