சாத்தான்குளம் அருகே கோவில் வாசலில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை ?
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சண்முகபுரத்தை சேர்ந்த இசக்கி பாண்டி மகன் சுந்தர் (30), பண்ணம்பாறை சுப்பராயபுரம் கிராமம் இடையே உள்ள சாஸ்தா கோவில் வாசலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது? இது குறித்து சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் சுந்தர் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுந்தரின் உறவினர்கள் சுந்தர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.