திருச்செந்தூர் அருகே நாய் குறுக்கே வந்ததால்  இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த   இளைஞர் உயிரிழப்பு.


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினம் பகுதியை சேர்ந்த கென்னடி என்பவரின் மகன் செல்வின் அபிஷேக் (26), இவர் தனது இரு சக்கர வாகனத்தில் குலசேகரப்பட்டினம் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது  எதிர்பாராத விதமாக நாய் குறுக்கே வந்ததில், இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த செல்வின் அபிஷேக் பலத்த காயம் அடைந்து சிகிச்சை அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குலசேகரப்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.