தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு.



தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த கலைமுத்து என்பவரின் மகன் மாரிமுத்து(41), இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார், இந்நிலையில் வழக்கம் போல் தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில் உள்ள ஒரு குடோனில் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் மாரிமுத்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் முத்தையாபுரம் காவல் காவல் நிலைய போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.