தூத்துக்குடி அருகே கடலில் தவறி விழுந்த மீனவ இளைஞர்  உயிரிழப்பு!



தூத்துக்குடி திரேஸ்புரம் - முத்தரையர் நகர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் மாயாண்டி (27), இவர் பல ஆண்டுகளாக மீன்பிடித் தொழில் செய்து வந்துள்ளார், இந்நிலையில் நேற்று வழக்கம்போல் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து நாட்டு படகில் சக மீனவர்களுடன் கடற்கரையில் இருந்து சுமார் 5 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மாயாண்டி கடலில் தவறி விழுந்துள்ளார்.


இதனை அடுத்து சகமீனவர்கள் அவரை உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.


இதுகுறித்து தூத்துக்குடி மரைன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.