தூத்துக்குடி அருகே  வாகன விபத்தில் பெண் உயிரிழப்பு.


தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு பகுதியை சேர்ந்த  பொன்ராஜ் என்பவரின் மனைவி புஷ்பராணி (43), இவர் தூத்துக்குடி செல்வதற்காக முள்ளக்காடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து சாலையைக் கடக்கும் என்ற போது எதிர்பாராத விதமாக அதிவேகமாக வந்த சொகுசு கார்  மோதியதில் புஷ்பராணி பரிதாபமாக உயிரிழந்தார், இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.