ஓட்டப்பிடாரம் அருகே விஷம் குடித்துப் பெண் தற்கொலை!


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தெற்கு தீர்த்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மனைவி இசக்கியம்மாள் (60), இவருக்கு பல ஆண்டுகளாக தீராத வயிறுவலி இருந்ததாக கூறப்படுகிறது, மருந்து எடுத்தும் வயிற்று வலி தீராததால் மனவிரக்தியில் இருந்த இசக்கியம்மாள் பூச்சி மருந்தை குடித்து உயிரிழந்தார், இதுகுறித்து பசுவந்தனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.