செல்போன் பயன்படுத்துவதை கண்டித்த பெற்றோர் - ஓட்டப்பிடாரம் அருகே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் - போலீசார் விசாரணை. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பெரியமகிபாலன் குளத்தில் தீ எரிந்த நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது . போலீசார் அந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில் இறந்து கிடந்தது வடக்கு பரும்பூரை சேர்ந்த பெருமாள் மகன் முருகன் (35) என்பது தெரியவந்தது. மாற்றுத்திறனாளியான இவர் ஓட்டப்பிடாரத்தில் பழக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். கடையில் வியாபாரம் செய்யமால் எப்போதும் செல்போனில் மூழ்கி இருந்துள்ளார். மேலும் வீட்டிற்கு சென்றாலும் செல்போன் கையுமாக இருந்துள்ளார். இது குறித்து அவரது பெற்றோர் கண்டித்தும் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல சொல் போனை அதிகமாக பார்த்து கொண்டு இருந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் கோபமடைந்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.மன வேதனையில் இருந்த முருகன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. உடலை போலீசார் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்....
தூத்துக்குடி
மாற்றுத்திறனாளி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தேசிய பறவையை மீட்ட தீயணைப்பு வீரர்கள்!
அடுத்த
கனவுல கூட எங்க ஊருக்கு பஸ் வரும்னு நினைச்சு பார்க்கல 75 ஆண்டுகளுக்கு பின் இப்ப வந்துருச்சு! மு க ஸ்டாலின் ஐயாவுக்கு நன்றி தெரிவித்த கிராம பெண்கள்!
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026