விளாத்திகுளத்தில் வேளாண்மை துறை சார்பில் நடைபெற்ற சிறுதானிய திருவிழா!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இன்றைய தினம் வேளாண்மை துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா இதில் கலந்துகொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த தானிய வகைகள் மற்றும் இடுபொருள்கள், உழவு இயந்திரங்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு, கருத்தரங்கில் வேளாண்மை குறித்து விவசாயிகளிடம் உரையாற்றினார். இதில் வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.