காய்கறி விலைகள் உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தக்காளி, சின்ன வெங்காயம், உள்ளிட்ட பொருட்களை ரேஷன் கடையில் வழங்க கோரி இந்திய ஜனநாயக சங்க மாதர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு! தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக வரலாறு காணாத அளவு தக்காளி விலை ரூபாய் 120 வரையும் சின்ன வெங்காயம் கிலோ 200 ரூபாய் வரையும் பச்சை மிளகாய் 100 ரூபாய் வரையும் இஞ்சி 300 ரூபாய் வரையும் கத்திரிக்காய், அவரைக்காய், பீன்ஸ், உள்ளிட்ட காய்கறிகள் கிலோ 100 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்கள் காய்கறி வாங்கி பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மத்திய மாநில அரசுகள் சின்ன வெங்காயம் பதுக்கி வைத்து விலை உயர்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் உயர்ந்து உள்ளதால் சாதாரண ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே நியாயவலைக் கடைகள் மூலம் தக்காளி சின்ன வெங்காயம் ஆகியவற்றை குறைந்த விலைக்கு பொதுமக்கள் பயன்படும் வகையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடி
தக்காளி, சின்ன வெங்காயம், உள்ளிட்ட பொருட்களை ரேஷன் கடையில் வழங்க கோரி இந்திய ஜனநாயக சங்க மாதர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மத்திய அரசுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிப்பு!
அடுத்த
அனுமதிக்கபட்ட ஒலியளவு எவ்வளவு? கோவில் விழாக்களில் தொடரும் விதிமீறல்கள்... கண்டுகொள்ளாத காவல்துறை!
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026