தூத்துக்குடியில் நடந்து சென்றவர் மீனவர் மீது லாரி மோதி உயிரிழப்பு.
தூத்துக்குடி பேராவூரணி பகுதியை சேர்ந்தவர் குமராண்டி மகன் அய்யனார் (45), மீனவரான இவருக்கு காது கேற்றல் குறைபாடு மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிஆவர், இந்நிலையில் இவர் தூத்துக்குடி துறைமுகம் சாலையில் நடந்து சென்ற போது அவ்வழியாக வந்த லாரி இவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்த அய்யனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்துதென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.