கோவில்பட்டியில்இயற்கையை நேசிக்கும் மனிதர்! அரசு உதவிக்கரம் நீட்டுமா பசுமை இயக்கத்தினர் கோரிக்கை! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பசுமையை உருவாக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து மரக்கன்று நடுவது மட்டுமின்றி தினந்தோறும் அதற்கு தண்ணீர் ஊற்றுவது, பராமரிப்பு செய்வது என்று ஜீவ அனுக்கிரக பசுமை இயக்கம் தொடர்ந்து அறப்பணியை செய்து கொண்டு வருகிறது. தினமும் காலையில் அதன் நிறுவனர் ராஜேந்திரன் வாகனம் மூலம் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவதை பலரும் பார்த்து இருக்க முடியும்.. கோவில்பட்டி நகரில் உள்ள சாலைகளில் தற்போது அதிகளவில் மரக்கன்றுகள் தளிர்த்து வளர்ந்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது...மரக்கன்றுகளை பராமரிப்பு செய்யவும் தண்ணீர் ஊற்றவும் ஜீவ அனுக்கிரக பசுமை இயக்கம் பயன்படுத்திய வாகனம் மிகவும் பழுதடைந்து அது செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனை சீரமைக்க இயலாது என்று பழுது நீக்குபவர் கள் கூறிவிட்டாதல் வேறு வாகனம் வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களுக்கு உதவும் வகையில் உங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று ஜீவ அனுக்கிரக பசுமை இயக்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்...

 தொடர்பு கொள்ள:94424 44920 - ராஜேந்திரன்

வங்கி கணக்கு எண்:A/c.No.1149115000009661

IFSC: KVBL0001149