தூத்துக்குடி அருகே மனைவியை கொடுமைபடுத்திய கணவனுக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை!
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடு கூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் சிவா (34) என்பவர் கடந்த 2014 ஆம் தனது மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிவாவை கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-3ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி. விஜய் ராஜ்குமார் (28.06.2025) குற்றவாளி சிவா என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூபாய் 500/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட உதவி அரசு தரப்பு வழக்கறிஞர் கண்ணன் அவர்களையும் விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் ஆனந்த ஜோதி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.