தூத்துக்குடியில் சங்குகுளிக்க சென்ற மீனவர் பரிதாபமாக உயிரிழப்பு.
தூத்துக்குடி கீழ அலங்கார தட்டு பகுதியை சேர்ந்தவர் பிரதிஷ்ட்டன் (38), இவர் சங்குகுளிக்குக்கும் தொழில் செய்து வந்துள்ளார் இந்நிலையில் திரேஸ்புரம் கடற்கரையிலிருந்து 5 கிலோமீட்டர் தூரம் கடலில் இறங்கி சங்கு குளிக்க சென்ற பிரதீஷ்ட்டனின் காலில் கம்பரசர் வயர் சுத்தி கடல் நீர் அடியிலே பரிதாபமாக உயிரிழந்தார், இதுகுறித்து தூத்துக்குடி மறைன் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.