திருச்செந்தூர் அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த: 70 வயது முதியவருக்கு சாகும் வரை தண்டனை!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு 16 வயது சிறுமியை தூத்துக்குடியைச் சேர்ந்த தங்கபாண்டி (70/2026) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் மேற்படி தங்கபாண்டியிடம் கேட்ட போது தங்கபாண்டியன் மகளான தூத்துக்குடியைச் சேர்ந்த வேதசெல்வி (42/2026) மற்றும் மகனான ராஜா (34/2026) ஆகிய இருவரும் சேர்ந்து மேற்படி பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து மேற்படி பாதிக்கபட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ மற்றும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி வழக்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் - II ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி பிரீத்தா (23.01.2026) மேற்படி எதிரிகள் தங்கபாண்டி குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு அவருக்கு இயற்கையாக மரணம் ஏற்படும் வரை ஆயுள்தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும் எதிரிகள் வேதசெல்வி மற்றும் ராஜா ஆகிய இருவருக்கும் தலா ரூபாய் 5000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார், திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரசீதா மற்றும் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினரையும் இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய காவல் ஆய்வாளர் இந்திரா நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் அவர்களையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் பாராட்டினார்.