ஓட்டப்பிடாரம் அருகே  6 வயது சிறுமிக்கு  பாலியல் தொல்லை கொடுத்த 61 வயது முதியவர் கைது!




தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மணியாச்சி நாறைக்கிணறு பகுதியை சேர்ந்தவர் ஆயிரம்காத்தான் என்பவரின் மகன் சுப்பிரமணியன் (61) வயது முதியவர், இவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அந்த சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முதியவர் சுப்பிரமணியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.