விளாத்திகுளம் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 59 வயது முதியவருக்கு 20 வருடம் கடுங்காவது சிறை தண்டனை மற்றும் ரூ,10000 அபராதம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணையில், வேப்பலோடை - வி. கழுகாச்சலபுரம் கிராமத்தை சேர்ந்த மரிய மைக்கேல் மகன் மணி(59) ,என்ற முதியவருக்கு தூத்துக்குடி போக்சா நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குற்றவாளியான மணி என்பவருக்கு 20 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலெட்சுமி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி அவர்களையும் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர்கள் சமுத்திரக்கனி மற்றும் ஸ்டெல்லா மேரி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.