தூத்துக்குடியில் கலப்பட டீசல் விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது.


தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை மீன்பிடித் துறைமுகம் அருகே கலப்பட டீசல் விற்பனை நடைபெற்று வருவதாக வந்த தகவலின் பேரில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த பிரதீப்ராஜ்(30), மற்றும் கிட்டப்பன்(37) ஆகியோர் சுமார் 9 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் கடத்தி வந்தது தெரியவந்தது, இதனை அடுத்து இருவரையும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் மதுரையில் இருந்து லாரி மூலம் கலப்பட டீசல் கடத்தி வந்து மீன்பிடி படகுகளுக்கு விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்தது, மேலும் இதுகுறித்து  தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.