20 வருடங்கள் பணியாற்றி நிறைவு செய்த தூத்துக்குடி மாவட்ட 10 ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பாராட்டு!
தமிழக முழுவதும் உள்ள ஊர்க்காவல் படையில் சேர்ந்து சேவை மனப்பான்மையுடனும் தன்னார்வத்துடனும் கடந்த 20 வருடங்களாக சிறப்பாக பணிபுரிந்த ஊர்க்காவல் படை வீரர்களுக்கு, அவர்களது 20 வருட சிறப்பான பணியினை பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்குமாறு குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவின் படி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் சேர்ந்து 20 வருடங்களாக சிறப்பாக பணிபுரிந்த 10 ஊர்க்காவல் படை வீரர்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மாவட்டக்காவல் அலுவலகத்தில் வைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி அவர்களது பணி சிறக்க வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.
இந்தநிகழ்வின் போது ஊர்க்காவல் படை வட்டார தளபதி பாலமுருகன், சார்பு ஆய்வாளர் ராஜதுரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.