தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரி ஜங்ஷன் அருகே  கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த, திருச்செந்தூர் ரோடு ராஜபாண்டி நகர் பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் சரோஜ் குமார்(24) என்பவரை தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவரிடம் விற்பனைக்காக வைத்திருந்த 3 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.