கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது இதனால் தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்களுக்கு மழை மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சியில் பெய்த தொடர் மழையின் காரணமாக தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் பழைய அருவியில் கண்ணிமைக்கும் நேரத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அங்கு குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் தங்கள் குழந்தைகள் மற்றும் உடன் வந்தவர்களுடன் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதில் குளிக்க வந்த திருநெல்வேலி பகுதியை சேர்ந்த அஸ்வின் என்ற (16) வயது சிறுவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டான், இதனை அடுத்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் அடுத்து சொல்லப்பட்ட சிறுவனை  நீண்ட நேரமாக தேடிய நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். மேலும் வெள்ளத்தில் வேறு யாரோணும் அடித்து செல்லப்பட்டுள்ளனரா என தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை மற்றும் வனத்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.