தூத்துக்குடி பேல் சிட்டி பத்திரிகையாளர் சங்கம் சார்பில் எம் எஸ் டி டர்ஃ ஸ்டேடியத்தில்  நடைபெற்ற ஐந்து நபர் கால்பந்தாட்ட லீக் போட்டி நடைபெற்றது.  இளைஞர்கள் மத்தியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி பேல் சிட்டி பத்திரிகையாளர் சங்கம் சார்பில் தூத்துக்குடி கேடிசி நகர் கால் பந்தாட்ட அணியும் பிரேயண்ட் நகர் கால்பந்தாட்ட அணியும் மோதின. கேடிசி நகர் அணி முதலில் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. தொடர்ந்து பரபரப்பாக விளையாடிய நிலையில் பிரைன் நகர் அணி தொடர்ந்து இரண்டு கோள்கள் அடித்து முன்னிலை பெற்றனர்.  கடுமையான போட்டிக்கு இடையில் கேடிசி நகர் அணி காட்சன் ஒரு கோல் அடித்து சமன் செய்தார்,

இரு அணிகளும் 2-2 என்ற சம நிலையில் போட்டி முடிவடைந்தது.