கீழ ஈரால் தொன்போஸ்கோ கல்லூரி சார்பில், மாபெரும் மினி மாரத்தான் போட்டி: 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!




"தொன்போஸ்கோ வழியில் கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக" தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ ஈரால் தொன்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், கீழ ஈராலில் மாபெரும் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து 350க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வருகை தந்து மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்று சிறப்பாக ஓடினர். இப்போட்டியை கல்லூரியின் முதல்வர், செயலர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.


கீழ ஈரால் கிராமத்திலிருந்து தொடங்கிய இந்த மினி மாரத்தான் போட்டியில் ஆண்கள் பிரிவுக்கு 6 கி‌.மீ தூரமும் , அதேபோன்று பெண்கள் பிரிவில் 5 கி.மீ தூரமும் நிர்ணயிக்கப்பட்டு வாலம்பட்டி வழியாக T.சண்முகபுரம் கிராமத்தில் நிறைவுற்றது. இப்போட்டிகளில், ஆண்கள் பிரிவில் காட்டுநாயக்கன்பட்டி பள்ளியைச் சேர்ந்த கருத்தப்பாண்டி முதலிடத்தையும், திருநெல்வேலியைச் சேர்ந்த அஜித் மற்றும் ஆனந்த் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றனர். அதேபோல், பெண்கள் பிரிவில் காட்டுநாயக்கன்பட்டி பள்ளியைச் சேர்ந்த கனகலட்சுமி முதலிடத்தையும், SRM ஸ்போர்ட்ஸ் கிளப்பைச் சேர்ந்த சங்கீதா இரண்டாம் இடத்தையும், கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஷஃப்னா ஷெரின் மூன்றாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். பின்னர் இப்போட்டியில் வெற்றி பெற்ற தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.