தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர்-நல்லூர் கிராமத்தை சேர்ந்த உகந்த ரூபன்(27) இவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார், இவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று பதாகையை பிடித்தவாறு, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில்  ,முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் 99 சதவீத தீக்காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு வேலையில்லாத விரக்தியில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.