செல்போனில் மூழ்காதிங்க - உடலை வலிமையாக வைத்துக் கொள்ளுங்கள் - என்பதை வலியுறுத்தி ஓட்டப்பிடாரம் அருகே நடைபெற்ற மினி மராத்தான் போட்டி - ஆர்வமுடன் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் மாணவிகள்!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கீழ முடிமன் கிராமத்தில் அமைந்துள்ள புனித வளன் மேல்நிலைப்பள்ளியின் வெள்ளி விழா 25வது ஆண்டினை முன்னிட்டு குழந்தைகள் செல்போனில் மூழ்குவதை தவிர்க்கும் வகையிலும், உடலை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு இன்று பள்ளியின் சார்பாக மினி மராத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர் ,மாணவியர் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏளனமான பள்ளி மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர்.இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் சான்றிதழ் வழங்கப்பட்டது.இந்த மினி மராத்தான் போட்டி பற்றி தலைமையாசிரியர் அன்பு கூறுகையில் மாணவ மாணவிகள் விளையாட்டுப் போட்டிகள் கலந்து கொண்டால் உடல் நன்றாக இருக்கும்,பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்,மாணவ மாணவிகள் இடம் செல்போன்கள் பெற்றோர்கள் தரக்கூடாது இதனால் மனதளவில் பாதிப்புக்குள்ளாகி விபரீத முடிவுகள் எடுத்து வருகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் மினி மராத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் அன்புநாதன்,பள்ளியின் தாளாளர் வின்சென்ட் மற்றும் ஆசிரியர் ஹெலன் மேரி,குழுத் தலைவர் ஒருங்கிணைத்தார்கள். அவர்கள் கலந்து கொண்டனர்...
விளையாட்டு
மினி மராத்தான் போட்டி - ஆர்வமுடன் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் மாணவிகள்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தமிழக அரசு 12 1/2 லட்சம் கோடி கடனில் உள்ளது விரைவில் திவாலாகும்:பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி!
அடுத்த
அந்த்யோதயா விரைவு ரெயில் 40 நிமிடங்கள் நிறுத்தம்...
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026